ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
அங்குள்ள சிறைச்சாலை, போலீஸ் தலைமையகம், இரண்டு பிற இடங்களில் இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகர் இன்னும் தலிபான்களிடமிருந்து முழுமையாக விடுபடவில்லை.
சிறைச்சாலைக்குத்தான் தலிபான்கள் முக்கியமாக குறி வைத்திருந்தனர். இருப்பினும் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கைதிகள் யாரும் தப்பிச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கன் அதிபர் கர்சாயின் உறவினரும், மாகாண கவுன்சில் உறுப்பினருமான அகமது வாலி கர்சாய் கூறுகையில், எனது வீட்டுக்கு அருகே 2 குண்டுகள் வெடித்தன. இதில் வீட்டுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
கடந்த 2008ம் ஆண்டு சிறைச்சாலையை தீவிரவாதிகள் தகர்த்தனர். பின்னர் அதை சீரமைக்கும் பொறுப்பை கனடா நாட்டுப் படையினர் மேற்கொண்டனர். பாதுகாப்புப் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
கடந்த முறை சிறைச்சாலையை தகர்த்த தீவிரவாதிகள் பல கைதிகளை அங்கிருந்து கொண்டு சென்றனர். அவர்களில் பலர் தீவிரவாதிகள் ஆவர்.
அதைத் தொடர்ந்து கனடியப் படையினர் சிறைச்சாலையை மிகவும் உறுதி படைத்ததாக மாற்றி விட்டதால் இந்த முறை நடந்த குண்டுவெடிப்பில் தலிபான்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை என்றார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
