வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றியபோது திடீர் மரணம் அடைந்த குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின் சடலம் கைதடி கிழக்கில் உள்ள ஊற்றல் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதியதொரு மரண பரிசோதனைக்காக நேற்று புதன்கிழமை தோண்டியெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இவரின் மரண பரிசோதனை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு அது ஒரு தற்கொலை மரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவல்துறை நீதிவான் இ.வசந்தசேனன் மயானத்துக்கு நேரில் சென்று சடலம் உரிய முறையில் தோண்டப்படுகின்றமையை அவதானித்தார்.
சடலம் மரண பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு எடுத்துச் வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்
- லஞ்சம் வழங்கி பா.உறுப்பினர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர்
- கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு
- பதாகை அச்சிட்டவர்களை காணவிவில்லை
- இராணுவப்புரட்சிக்கு அரசாங்கம் அழைப்பு விடுகிறது : சரத் பொன்சேகா
- ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி
- தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது
- இரு யாழ் பல்கலை. மாணவர் தகராறு கத்திக்குத்தில் முடிவு
- நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்





.jpg)










