அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயலிழந்து போகும் நிலை உருவாகியுள்ளதாக விசனம் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, இன்று பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி விரிவுரையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது உயர் கல்வித்துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
வெளிநாடுகளில் தொழில் புரியும் கல்விமான்கள்,புத்திஜீவிகளை நாடு திரும்பி சேவை புரியுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உலகெங்கும் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
அவர் அப்படி அழைப்பு விடுக்கும் நிலையில் இன்று எமது நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் உக்கிரமடைந்து காணப்படுகின்றது.றுஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அரசாங்கம் எழுத்து மூலமும் வாய்மூலமாகவும் அளித்த வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடமைகளை பகிஷ்கரிக்கத் தொடங்கியுள்ளனர்.இதன் காரணமாக நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பே ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2008 ஆம் ஆண்டில் வாக்குறுதியளித்திருந்தார்.ஆனால் இன்றுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ,எஸ்.பி.திசாநாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் அதற்கும் பலன் கிட்டவில்லை.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவது நியாயமானதென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் கூட தெரிவித்திருந்தார்.
தற்போது கடமையை பகிஷ்கரித்து வரும் விரிவுரையாளர்களின் நாளாந்த சம்பளத்தை வெட்டுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் வாக்குறுதியளித்துவிட்டு இப்போது அந்த வாக்குறுதியையும் மீறியுள்ளார்.
இவ்வருடத்தில் 2500 ரூபா அதிகரிப்பதற்கு தம்மிடம் பணம் இல்லை எனக் கூறும் அரசு அடுத்த வருடத்தில் நிலுவைச் சம்பளத்துடன் வழங்கப்படும் எனக் கூறுவது கேலிக்கூத்தானதொன்றாகும்.
அரசாங்கம் அரச ஊழியர்களை மட்டுமன்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் ஏன் நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளமையும் தெளிவாகியுள்ளது.அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வுகாண முற்படாது போனால் இந்த விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளனர்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயலிழந்து போகும் நிலை ஏற்படலாம்.இதனால் நாட்டின் கல்வித்துறை மோசமான நிலைக்குத் தள்ளப்படும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
இதற்கு அரசுதான் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் வீதிக்கு இழுத்துவிட்டுத்தான் இலங்கையை ஆசியாவின் ஆச்சரிய பூமியாக மாற்றப்போகின்றதா அரசு எனக் கேட்க விரும்புகிறோம்.

- வெருகலம்பதி ஸ்ரீ முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்பம்
- 10இலட்சம் பெறுமதியான சட்டவிரோத உரமூட்டைகள் களுவாஞ்சிகுடியில் பறிமுதல்
- அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது
- இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை

.jpg)