அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோரை இலங்கைக்குத் திருப்பியனுப்ப ஆரம்பித்திருப்பதன் மூலம் தமிழர்களின் வாழ்வை அரசாங்கம் ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்வதாக அங்குள்ள தமிழ் குழுக்கள் கூறுகின்றன.

மூன்று தமிழர்கள் அண்மையில் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் 38 பேர் விரைவில் திருப்பியனுப்பப்படுவார்கள் எனவும் அரசாங்கம் கூறுகிறது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நிலைமையில் முன்னேற்றமேற்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கருதுகிறது.

ஐ.நா. வின் அகதிகள் தொடர்பான வழிகாட்டல் ஏற்பாடுகள் தொடர்பான தீர்மானம் விரைவில் எடுக்கப்படவுள்ள நிலையில், தமிழர்கள் திருப்பியனுப்பப்படவுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் ஐ.நா. தீர்மானங்களை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தமிழர்கள் தாயகத்திற்குத் திரும்பிச் சென்றால் கைதுசெய்யப்படும் சாத்தியமிருப்பதாக அவுஸ்திரேலிய தமிழர் சங்கங்களின் சம்மேளனத்தைச் சேர்ந்த டாக்டர் விக்டர் இராஜகுலேந்திரன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஆட்களிற்கு விடயங்கள் இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றன.

இதுவே நிலைமையாகவிருந்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாதாரண தமிழருக்கு என்ன நடக்கும்? அவர்களின் வாழ்க்கை ஆபத்தாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. வின் புதிய வழிகாட்டுதலுக்கு காத்துக்கொண்டிருக்காமல் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கியிருப்பதாக இராஜகுலேந்திரன் கூறியுள்ளார்.

நாங்கள் எமது சொந்த ஆலோசனைப்படியே நடக்கின்றோம். எமது உயர்ஸ்தானிகர் அங்கு (கொழும்பு) உள்ளார். அவர் சகல விபரங்களையும் பெற்று வருகிறார். அந்தத் தகவலின் அடிப்படையில் நாங்கள் மதிப்பீடுகளை மேற்கொள்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சு சொல்லக்கூடும்.

ஆனால், அவை சரியானவையா? அவர்களால் சுதந்திரமாகச் சென்று தமது உறவினரிடம் தகவலை தரக்கூடியதாகவுள்ளதா? என்று இராஜகுலேந்திரா கேள்வியெழுப்பியுள்ளார்.

எங்களையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் பேச்சுக்கு அழைக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஒருபோதும் அதனைச் செய்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009