"ஐ.நா.வில் தமிழ் பெண்புலி" என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா கார்டியன் கட்டுரையொன்றை நேற்றுசனிக்கிழமை வெளியிட்டிருக்கிறது.
பென் சில்வா என்பவர் இதனை எழுதியுள்ளார்.அதில் குறிப்பிட்டிருப்பதாவது திருமதி நவநீதம்பிள்ளை நீண்டகாலமாக இலங்கைக்கு எதிரானவரும் விடுதலைப்புலிகளுக்கு சார்பான வருமாகும்.
இலங்கைக்கு சாதகமாக ஐ.நா.உறுப்பு நாடுகள் வாக்களித்திருந்தபோதும் கூட நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிரானவர்.
அவர் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துள்ளார். தமிழ் பயங்கரவாதத்தையும் அதிகாரத்தை கட்டியெழுப்புவதையும் இல்லாமல் செய்வதற்கு அவர் எதனையும் முயற்சிக்கவில்லை.
இவையே இலங்கையில் மனிதாபிமான துஷ்பிரயோகத்திற்கான பிரதான காரணங்களாகும். ஆனால், பயங்கரவாதத்தை அழித்த இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு தனது அதிகாரத்தின் மூலம் அவர் சகலவற்றையும் செய்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை செய்யப்படவேண்டும். அவர் தமிழ் இனத்தை சேர்ந்தவராக இருப்பதால் தமிழ் இனவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர் தயங்கினார் என்பது தொடர்பாக விசாரணை செய்யப்படவேண்டும்.
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் தொடர்ந்து மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்துவரும் அமெரிக்காவுக்கு எதிராக அவர் எதனையும் செய்திருக்கவில்லை.
இலங்கையை கிரமமாக அவர் மிரட்டுவதும் பாரியளவில் மனித உரிமைகளை மீறுபவர்களான அமெரிக்கா,பிரிட்டன் தொடர்பாக அவர் உணர்வின்றி இருப்பதும் அவரை தமிழ் இனவாதியாக பலரை பார்க்கச்செய்கிறது.
தமிழ் பயங்கரவாதிகள் மீது அனுதாபம் கொண்டவராக அவரை பார்க்கச்செய்கிறது. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா. விசாரணை செய்திருக்கவேண்டும்.
அவரும் ஐ.நா.விலுள்ள மற்றொரு தமிழ் பெண்ணும் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்து தமிழ் புலிகளுக்கு சாதகமாக செயற்படுவதாக தோன்றுகிறது.
ஏனென்றால் பிள்ளையும் குமாரசுவாமியும் தமிழர்கள்.அவர்களை இலங்கை தொடர்பான விடயங்களில் சம்பந்தப்படுத்த அனுமதிக்கக்கூடாது.
நவநீதம்பிள்ளை, குமாரசுவாமி ஆகியோரின் இனத்துவம் மற்றும் சாத்தியமான பக்கச்சார்பு குறித்து ஐ.நா. உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இரு தரப்பும் இழைத்துள்ள அட்டூழிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டுமென நவநீதம்பிள்ளை விடுத்த அறிக்கையை நாம் பரிசீலிக்கிறோம்.
விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் இல்லையென்பதை அவர் விளங்கிக்கொள்வதில் அறியாமையுடையவராகவோ பேதமைத்தன்மையுடனோ அவர் இருக்க முடியாது.
விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் இல்லையென்பதை அவர் நன்கறிவார் என்பது ஊகிக்கப்படத்தக்கதாகும்.விசாரணைக்கு வலியுறுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர் வேட்டையாட முயற்சிக்கிறார் என்பது தெளிவானதாகும். அவரின் செயற்பாடு காரணமாக அவரைத் தமிழ் இனவாதியென பலர் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன், அவர் புலிகள் மீது அனுதாபம் கொண்டவர் என்றும் ஐ.நா.வில் இருக்க தகுதியானவரா என்றும் பலர் சந்தேகிக்கின்றனர்.
உண்மையில் பான் கீ மூனால் நியமிக்கப்படும் குழுவானது ஐ.நா.வில் இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்கு எதிராக நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவாதம் இருக்கின்றதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும்.
ஏனெனில் பிள்ளை,குமாரசுவாமி மற்றும் அலன் போன்ற ஆட்கள் குமாரசுவாமியின் செல்வாக்கிற்குட்பட்டவர்களாகும். ஐ.நா.வை தமிழ் புலிகள் மொய்த்திருக்கும் இடமாகவும் தமிழ் இனவாதிகளின் குகையாகவும் பலர் பார்க்கிறார்கள்.
அவர் தனது இனத்துவத்தை வெளிப்படுத்தவில்லையென்றால் அவர் தனது கடமையை தொழில்சார் நிபுணத்துவத்துடன் மேற்கொண்டிருந்தால் ஐ.நா.வில் அவரின் பதவி குறித்து பரிசீலனைக்கு எடுக்கமுடியும்.
திருமதி பிள்ளை தனது பதவியை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் இலங்கையை மிரட்டி தொந்தரவுபடுத்தும் விடயம் தொடர்பாக தெளிவான ஆதாரம் உள்ளது. பான் கீ மூன் மீது பிள்ளை செல்வாக்கு செலுத்தும் சாத்தியம் கூட உள்ளது.அவரின் செயற்பாடுகள் அவரின் தமிழ் இனம் சார்ந்தவையென பலர் நம்புகின்றனர்.
ஊழல் மற்றும் பயங்கரவாதிகள் சார்பு அதிகாரிகள் தொடர்பாக ஐ.நா. நன்கறியப்பட்டதொன்றாக இருக்கிறது. பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததால் ஆப்கானிஸ்தானிலிருந்து ஐ.நா. அதிகாரிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
ஐ.நா.வானது ஊழல் நிறைந்தது என்றும் பயங்கரவாதிகள் மீது அனுதாபம் கொண்டது என்றும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஆதரவான அமைப்பு என்றும் மேலும் சேறுபூசப்படுவதை தடுப்பதற்காக நவநீதம்பிள்ளைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவேண்டும்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
