இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை தமது சுயாதிக்க கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கவே இந்தியா விரும்புவதாக தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தாமர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நிருபமாராவ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை இலங்கை அரசாங்கத்திடம் காட்டி அதனை வடகிழக்கில் அமுல்படுத்தக்கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பிக்கு முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை தேசிய நூலகத்தில் இடம்பெற்'றபோதே   அமில தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"பிரிவினைவாதத்தின் ஆயுதப் போராளிகள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் இலங்கையில் பிரிவினைவாத சக்திகளின் செயற்பாடுகள் முழு அளவில் தோற்கடிக்கப்படவில்லை என நாம் பல முறை வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால் யுத்த வெற்றியின் மயக்கத்தில் இருந்த பொது மக்களும் அரசியல் தலைவர்களும் எமது கூற்றின் மீது கவனம் செலுத்தவில்லை.

இலங்கையில் காணப்பட்ட சிறு பிரச்சினைகளை அவதானக் குறைவாக அரசாங்கம் செயற்பட்டமையால் இன்று அவை அபாயகரமானவையாக தலைதூக்கியுள்ளன. இதனால், இந்தியா தனது பொருளாதார அரசியல் கேந்திர நிலையமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றது.

நிருபமாராவின் வருகையின் பின்னணியும் இதுதான். இலங்கையில் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது சர்வதேசத்திற்கு பல உறுதிமொழிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.

அவற்றை நிறைவேற்ற தவறியதாலேயே இந்தியா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பல அழுத்தங்களை கொடுத்துள்ளன.

இரட்டை வேடம் போடுவதில் அரசாங்கம் தனது கெட்டித்தனத்தை காட்டியுள்ளது. ஜீ.எஸ்.பி. எங்களுக்கு வேண்டாம் என்று பிரித்தானிய தூதரகம் முன்பு ஒரு குழுவை களமிறக்கி ஆர்ப்பாட்டம் செய்யும் அதேவேளை, திறைச்சேரி செயலாளரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி ஜீ.எஸ்.பி.க்காக கையேந்தி நிற்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் ஐ.நா.வுடனான உறவும் அதே போன்றுதான் இலங்கை சிங்கள, தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் சர்வதேசத்திற்கு மற்றுமொரு முகத்தையும் காட்டி வருகின்றது" என்றார்

 

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009