மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள் தங்கியிருக்கும் அனைத்துப் பீட மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்றுக் காலை அறிவித்திருந்தது.
பல்கலைக்கழக துணை வேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் கடந்த புதன்கிழமை மாணவர் குழுவொன்றால் மிகக் கடுமையாக மிரட்டப்பட்டு துணைவேந்தர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வைக்கப்பட்ட நிலையிலே அங்கு தோன்றியுள்ள மோசமான சூழ்நிலையில் நேற்று முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பதில் உபவேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்;நேற்று 12 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அவசர மூதவை கூட்டத்தின் பிரகாரம் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாணவர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலையில் இயங்கிவரும் கலை கலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், விவசாய பீடம் மற்றும் விஞ்ஞான பீட உள்ளக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் உடனடியாக இடைநிறுத்தப்படுவதுடன் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
