.jpg)
கொழும்பில் பயிற்சி பெற்றதாக லக்ஷர் ஈ தொய்பா அங்கத்தவர் தெரிவிப்பு
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கொழும்பிலுள்ள சுற்றுலாப் பகுதியொன்று லக்ஷர் ஈ தொய்பா அமைப்பிற்கான பயிற்சித் தளமாக விளங்குவதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 09 செப் 2010

18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்:2/3 பெரும்பான்மையை பெற்றது
8 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் அரசு 161 ஆதரவான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுகொண்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 08 செப் 2010
உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை பிரவேசித்திருக்கிறது.
முன்னொருபோதுமில்லாத வகையில் 800 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் முரளிதரன் (38 வயது) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அவரின்சாதனையை அண்மைய எதிர்காலத்தில் எவரும் முறியடிப்பதற்கான சாத்தியமற்ற நிலைமையே காணப்படுகிறது.
கடந்த 18 வருடங்களாக இலங்கையின் கிரிக்கெட் அணியில் விளையாடிவரும் முரளிதரனின் உத்வேகமளிக்கும் பிரசன்னத்தை இழந்துவிட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார ஏற்றுக்கொண்டிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை நேற்றுக் குறிப்பிட்டுள்ளது.
"மற்றொரு முரளியை நான் பார்க்கப்போவதில்லை. ஏனென்றால் அவ்வாறொருவரை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. அவரைப் போன்று ஒருவரும் இல்லை" என்று சங்கக்கார கூறியுள்ளார். முரளியில்லாமல் இருப்பது என்னைப் பொறுத்தவரை பாரிய இழப்பாகும். ஆனால், ஏனைய பந்துவீச்
சாளர்கள் டெஸ்டில் நாம் வெற்றிபெறுவதற்கு எவ்வாறு உண்மையில் உதவப்போகின்றார்கள் என்பதை நாங்கள் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
ஆனால், எங்களுக்கு எவராவது 8 அல்லது 9 விக்கெட்டுகளைப் பெற்றுத்தருவார்கள் என நான் நினைக்கவில்லை. கடுமையாகச் செயற்பட வேண்டியுள்ளது. பந்துவீச்சால் போட்டியில் வெற்றிபெறுவது ஒரு தனித்துவமான வழிமுறையாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆயினும் இலங்கைக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதாக முரளிதரன் நம்பிக்கை கொண்டுள்ளார்.பல பந்துவீச்சாளர்கள் படிமுறையாக வந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். 08 அல்லது 09 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் எடுத்துக் கொள்வதற்கு ஏனைய பந்து வீச்சாளர்கள் போராட்டத்தை நடத்த வேண்டி நேரிடுமென குமார் கூறியுள்ளார்.
ஆனால், கிரிக்கெட் மாற்றமடைந்துள்ளது. அவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும் என்று முரளி கூறியுள்ளார்.
- வெருகலம்பதி ஸ்ரீ முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்பம்
- 10இலட்சம் பெறுமதியான சட்டவிரோத உரமூட்டைகள் களுவாஞ்சிகுடியில் பறிமுதல்
- அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது
- இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை





.jpg)











