வன்னியில் உடனடிப் போர்நிறுத்தம், அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்த சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் அவர்களின் உண்ணா நோன்பு 11 நாட்களின் பின் இன்று வியாழக்கிழமை 11.30 அளவில் முடிவுக்கு வந்தது.