நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் அதன் தலைவர்கள் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து தமிழ் இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை அளிக்கின்றனர்.
இந்த தகவலை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் அமைப்பாளர் ருத்ர குமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன.
சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள்,சொத்துக்கள் சூறையாடப்பட்டு,தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை,குட்டிமணி உட்பட்ட எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி,பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும்,நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந் திருக்கின்றன வேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.
இனப்படுகொலை எல்லா இடங்களிலும் ஒரே வடிவம் எடுப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களைப் பொறுத்து அது பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் இடம் பெறுகிறது.
போரின் இறுதிக் கால கட்டங்களில் எமது மக்கள் மீது சிறிலங்காப்படைகள் புரிந்த இனப்படுகொலையில் 50,00 க்கும் மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டனர். மூன்று லட்சம் வரையிலான மக்கள் தடுப்புமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.
இன்றும் இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர்; முகாம்களில் தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குரிய புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் வழங்கப்படவில்லை. இவர்களை விட அடைத்துவைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் நிலை அச்சம் தருவதாகவே உள்ளது.
1983 இல் நடந்தேறிய சிறைச்சாலைப் படுகொலைகளின் நினைவுகள் எமது அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன.
1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில்,சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்படட் 200,00 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருகிறோம். நீதி வழங்கப்படாத எந்த ஒரு மக்கள் சமூகமும் அதன் காயங்களை என்றுமே ஆற்றிவிட முடியாது.
நீதியின் பெயராலும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்கு நியாயம் கோரி அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1. இனப்படுகொலைக்குள்ளாகி வரும் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதேயாகும். எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதே ஒரேவழி என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும்.
2. சிறிலங்கா அரசால் கொடும் சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் போர்க்கைதிகளாக மதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும். சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளினது பெயர் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும்,ராளிகளை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் சென்று பார்வையிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
3.அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்காகக் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
அத்தோடு இத்தருணத்தில் 1983 யூலை படுகொலையின் போது தமக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது,மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் பல தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த சிங்கள மக்களை நாம் நன்றியுடன் மனதில் இருத்துகிறோம்.
சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் புரிந்து வந்த இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த சிங்கள முற்போக்காளர்கள்,எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஆகியோரது கரங்களையும் தோழமையுணர்வுடன் நாம் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.
உங்களது குரல்கள் பெரும்பான்மையின் மத்தியில் பலவீனமாக இருந்தாலும் நீதியின் முன்னே வலுவானவை. நீதிக்கான எமது போராட்டத்துக்கு உங்கள் இணைவு மேலும் வலுச் சேர்க்கும்.
1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையினை நாம் நினைவுகூரும் இவ் வேளையில்,எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வலியுறுத்தியும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யக் கோரியும் ஜி. சிவந்தன் எனும் தமிழ் செயல்வீரன் பிரித்தானியாவிலிருந்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைமைப்பணிமனை நோக்கி யூலை 23 ஆம் திகதி இரவு நடைபயணம் ஒன்றினை ஆரம்பிக்கிறார்.
இரண்டு வாரங்கள் இடம் பெறப்போகும் இந் நடைப்பயணத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினைத் தெரிவிப்பதோடு,இப் போராட்டம் பூரண வெற்றியடைவதற்குரிய பங்களிப்பினை வழங்குமாறு தமிழ் மக்களை வேண்டி நிற்கிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று பல்வேறு அரசாங்கங்களுக்கு தமிழின அழிப்பு தொடர்பான ஆவணம் ஒன்றை அனுப்பி வைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் பன்னாட்டுத் தலைவர்களை நேரடியாக சந்தித்துஇ சிறிலங்கா அரசின் இனவழிப்புக்கு எதிராக நீதிகோரும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இனப் படுகொலைக்குள்ளாகிவரும் ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வினை இனப்படுகொலை புரிபவர்களிடம் இருந்தோ அல்லது மற்றோரிடம் கெஞ்சியோ மீட்டுவிட முடியாது.
சலுகைகளின் அடிப்படையில் இல்லாமல் நீதியின் அடிப்படையிலும்,அனைத்துலக சட்டங்களுக்கமைய எமக்குரிய உரிமைகளின் அடிப்படையிலுமே நமது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்’’என்று தெரிவித்துள்ளார்.
- 18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்:2/3 பெரும்பான்மையை பெற்றது
- வாக்கெடுப்பில் 7 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே கலந்துகொள்வர் –தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தி தெரிவிப்பு
- யாப்பு சீர்திருத்தம் சபையில் சமர்பிக்கப்பட்டது
- 18வது திருத்த சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் (2ஆம் இணைப்பு)
- திருமலையில் தமிழ் மாணவன் கடத்தல் -மீண்டும் தொடரும் கடத்தல் சம்பவம்
![]() புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம்சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம் இன்று பத்தாவது நாளாகத் ... Tuesday, 7 September 2010 விரிவு... |
![]() சுவிஸில் இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பிரஜாவுரிமைசுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண... Saturday, 4 September 2010 விரிவு... |
![]() சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. Sunday, 1 August 2010 விரிவு... |
![]() இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைதுசுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ... Thursday, 29 July 2010 விரிவு... |
- + 1 |
![]() ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலிமத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பாதணி தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் ... Wednesday, 8 September 2010 விரிவு... |
![]() ஆஸியில் அரசாங்கம் அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றார் கில்லார்ட்அவுஸ்திரேலியாவில் அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று பெற்றுக்கொண்டுள்ளார். Tuesday, 7 September 2010 விரிவு... |
![]() கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலிமத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று ... Tuesday, 7 September 2010 விரிவு... |
![]() பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலிபாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Monday, 6 September 2010 விரிவு... |
- + 1 |
![]() நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான முரளி தனது 46ஆவது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார். Wednesday, 8 September 2010 விரிவு... |
![]() தெலுங்குதேசம் நிர்வாகிகள் கைது போலீஸ் நிலையம் முன்பு சந்திரபாபு நாயுடு போராட்டம்ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் படிக்க முழு கல்வி செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த திட்டத்தை ராஜசேகரரெட்டி கொண்டு ... Tuesday, 7 September 2010 விரிவு... |
![]() கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழாகவிஞர் வைரமுத்து-பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகனான கபிலன் மற்றும் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.மாயாண்டி, பேராசிரியை அமுதா ஆகியோரின் மகள் டாக்டர் ரம்யா ஆகியோருக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திருமணம் ... Monday, 6 September 2010 விரிவு... |
மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் சென்னையில் இடம்பெற்றதுமறைந்த தமிழ் தலைவர் ஏ.எஸ்.மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது. Saturday, 4 September 2010 விரிவு... |
- + 1 |
![]() இலங்கை அணி சம்பியன்தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. Sunday, 29 August 2010 விரிவு... |
![]() சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். Tuesday, 17 August 2010 விரிவு... |
![]() முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ... Saturday, 24 July 2010 விரிவு... |
![]() முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்விகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ... Thursday, 22 July 2010 விரிவு... |
- + 1 |





.jpg)










