24 மணித்தியாலங்களுக்குள் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கரையில் புகலிடம் கோருவோருடன் வந்த இரண்டாவது படகு மீட்கப்பட்டதையடுத்தே அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயமானது "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த இருநாடுகள்" தொடர்பான மதிப்பீட்டை மீளாய்வு செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
வியாழன் மாலை 7 மணியளவில் 8 பயணிகள், 4 படகோட்டிகளுடன் வந்த படகை அவுஸ்திரேலியக் கடற்படையினர் இடைமறித்துள்ளனர். திவி தீவுகளுக்கு 370 கிலோ மீற்றர் மேற்கே இந்தப்படகு தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த வருடத்தில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் பிரவேசித்த 23 ஆவது படகு இதுவாகும்.இரு படகுகளிலும் வந்தவர்கள் ஆப்கானிஸ்தானியர் என்று நம்பப்படுகிறது.ஆனால், அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கான அகதிகளுக்கான வழிகாட்டல் ஏற்பாடுகளில் மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளது.
இதனால், அவுஸ்திரேலியாவுக்கு செல்வோருக்கான பாதுகாப்பு மறுக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது.இலங்கை ஆப்கான் தொடர்பான அகதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுவதே யூ.என்.எச்.சி.ஆரின் பிராந்தியப் பிரதிநிதி ரிச்சர்ட் ரௌலே உறுதிப்படுத்தியுள்ளார்.
வழிகாட்டல் விதிமுறைகள் என்ன கூறப்போகின்றது என்பதை முன் கூட்டியே நான் கூறுவதற்கு விரும்பவில்லை.ஆனால், இலங்கையில் முகாம்களிலிருந்த மக்கள் தொகையில் கணிசமான தொகையினர் முகாமைவிட்டு வெளியேறியுள்ளனர்.
சொந்த இடங்களுக்கு திரும்ப நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை ஏ.பி.சி. வானொலிக்கு கூறியுள்ளார்.
எமது முன்னைய ஆலோசனைகளில் மாற்றம் இருக்குமென நான் நினைக்கிறேன்.ஆனால், அது எவ்வாறு அமையுமென்பது தொடர்பாக நான் கூற விரும்பவில்லை.அதாவது பல்வேறு கணிப்பீடுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். வந்திருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை,புகலிடம் மறுக்கப்பட்ட 3 தமிழர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் அடுத்தவாரம் இலங்கைக்கு திருப்பி அனுப்பவுள்ளது.இந்த வருட முற்பகுதியில் 3 தமிழர்கள் உட்பட 13 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
- வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
- வன்னியில் நடப்பது என்ன? ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்
- வடக்கில் 4 இலட்சம் சிங்களவரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க திட்டம்:த.தே.கூ
- நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இனப்படுகொலை பற்றிய ஆவணங்கள் கையளிப்பு


.jpg)













